Breaking News

விவசாயிகள் நாமம் போட்டு உண்ணாவிரதம்

திருச்சி:

மூன்று வேளாண் சட்டங்கள், லக்கிம்பூர் விவகாரம் உட்பட விவசாயிகள் வலியுறுத்தி தொடர் போரட்டம் நடைபெற்றுவருகிறது. 

திருச்சியில் திருச்சி to கரூர் பைபாஸ் சாலை அருகில் அண்ணாமலை நகர், மலர் சாலையில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள்  உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 16.10.2021 சனிக்கிழமை  அன்று  காலை 9 மணிக்கு  விவசாயிகள் மத்திய அரசு விவசாயிகளின்  கோரிக்கைகளை ஏற்காமல் நாமம் போட்டுவிட்டது என்பதை சுட்டிக்காட்டி நாமம் போட்டுகொண்டு  நூதன  உண்ணாவிரதம் போராட்டம் துவங்கினர்..   

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க  மாநில தலைவர் அய்யாக்கண்ணு  தலைமையில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.


 

No comments

Thank you for your comments