ரூ.500 கோடி நஷ்ட ஈடு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு BGR நிறுவனம் நோட்டீஸ் நோட்டீஸ்!
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையிடம், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி, பி.ஜி.ஆர்., எனர்ஜி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில், பி.ஜி.ஆர்., தனியார் நிறுவனத்திற்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்தார்.
🔥பொருளாதாரம் - அரசு திட்டங்கள் நிலை என்ன? 👆🔔👍
இதையடுத்து, இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட அவர், தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,
அண்ணாமலை கூறும் ஆதாரங்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், இதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை,
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மன்னிப்பு கேட்க முடியாது. திருட்டை கண்டுபிடிப்பதற்காகத்தான் அந்த எக்ஸெல் ஷீட்டை பகிர்ந்தேன் என்றும், செந்தில் பாலாஜி இன்னும் மூன்று மாதங்கள் கழித்து பதவியில் இருந்தால் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை குறித்து பேச தொடங்குவோம் என்றார்.
இந்நிலையில், பி.ஜி.ஆர்., நிறுவனம் குறித்து அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது குறித்து, சமூக வலைதளமான ட்விட்டரில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி.
என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்!
தி.மு.க., அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம்.
இவ்வாறு அவர்பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும் பாஜகவினரும், திமுகவினரும் மாறி மாறி கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்...
பழைய சம்பவங்களை மேற்கோள் காட்டி இருதரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்...
தற்போது இந்த பனிபோர் மாளும் என்பது சந்தேகமே... நீளும் என்பதுதான் உண்மை...
நடப்பது என்னவென்று காலச்சக்கரத்தின் சுழற்சி கட்டாயம் காட்டி கொடுத்துவிடும்... பொறுத்திருப்போம்...
இவர்களின் சமூக வலைதள பனிபோர்களை காண கீழே உள்ள லிங்க்களை கிளிக் செய்யவும்...
சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள் 🙏நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்!@arivalayam அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை!நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது!சந்திப்போம்!#ResignEBMin— K.Annamalai (@annamalai_k) October 26, 2021
Sir. You have sued me for 500 Crore!Im a simple farmer with a couple of sheep’s in my farm & not worth that much like @arivalayam’s corrupt ministers for whom corruption-commission-cut money has become a way of life!I fully trust our judiciary!Pls proceed 🙏#ResignEBMin pic.twitter.com/JWqHNpqGzF— K.Annamalai (@annamalai_k) October 26, 2021
இந்த BGR நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Cap) ₹475 கோடிஅவர்கள் நமக்கு அனுப்பிய மான நஷ்ட நோட்டீஸ் - 500 கோடிஅந்த 500 கோடி இருந்தா அந்த கம்பெனியவே வாங்கலாமே 🤔 pic.twitter.com/4si0wmgFDS— Selva Kumar (@Selvakumar_IN) October 27, 2021
Gopalapuram 🤝 BGR Energy 🤝TNEB 🤝V. Senthil BalajiBGR Energy is being represented in court by DMK’s Rajya Sabha MP & it’s ‘legal luminary’ Shri. Wilson!It’s getting very interesting more our EB Min talks!Let us connect the dots & the answer will be evident ! #ResignEBMin https://t.co/YrkAy73fc7— K.Annamalai (@annamalai_k) October 22, 2021
Gopalapuram 🤝 BGR Energy 🤝TNEB 🤝V. Senthil BalajiLet us connect the dots & the answer will be evident !கோபாலபுரம் 🤝 பிஜிஆர் எனர்ஜி 🤝மின்சார அமைச்சகம் 🤝V. செந்தில் பாலாஜிஇந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்...விடை எளிதில் புரியும் !#ResignEBMin— K.Annamalai (@annamalai_k) October 21, 2021
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், (1/4) pic.twitter.com/sQu1KHbjAL
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 20, 2021
கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்ய பட்டுள்ளது!உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை! #ResignEBMin1 MWh - INR 20,0001000 KWh is equal to 1 MWh.1 KWh (1000 wats) is 1 Unit.1 unit = INR 20. pic.twitter.com/GgFhDRmaKb— K.Annamalai (@annamalai_k) October 20, 2021
1680ல் மறைந்த சத்திரபதி சிவாஜி, அக்டோபர் 3, 1967ல் சென்னை வந்தார் என்று சொல்லும் அளவுக்கு திரு. அண்ணாமலைக்கு வரலாற்று ஞானம் இருப்பதால், தேதி வாரியாக விளக்க வேண்டியதுள்ளது. எண்ணூர் அனல்மின் நிலையம் (ETPS) விரிவாக்கத்துக்காக, TANGEDCOனால் 30/3/2012 அன்று (1/5)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 21, 2021
BGR நிறுவனத்திற்கு, நின்ற பணிகளை துவங்கிட LoA வழங்கி, 1/3/2021 அன்று CTE (Content to Establish) கொடுக்கிறது. பேரம் படியாததால் ஏப்ரல் 2021ல், அந்த ஒப்பந்தத்தை முடித்து கொள்கிறது. BGR நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றம் சென்று வழக்காடி ஒப்பந்தப்படி பணியை ஆரம்பிக்க இருக்கிறது. (3/5)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 21, 2021
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் படி, மின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு, பணி ஆரம்பிக்கப்பட்ட பின், மேலும் காலம் தாழ்த்தாமல் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். (5/5)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 21, 2021

No comments
Thank you for your comments