Breaking News

திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் 15,981 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட 1வது வார்டு ஊராட்சி குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் 15,981   வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது 9 மாவட்டங்களுக்கு கடந்த 06.10.2021 அன்று நடைபெற்று நேற்றைய தினம் 12.10.2021 செவ்வாய்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட 1வது வார்டு ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நித்யா சுகுமார் முதல் சுற்றிலிருந்து இறுதி சுற்றான ஆறாம் சுற்றுவரை தொடர்ந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார்.

இறுதிச் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் 26,590 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் லலீதா பாய்யை விட 15,981 வாக்குகள் முன்னிலை வகித்து அமோக வெற்றி  பெற்றார்.

பின்பு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மைய்யத்தில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வெற்றி சான்றிதழை பெற்றார்.

இந்நிகழ்வின் போது திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார்,க.குமணன்,மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

அதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட 11 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 11 பதவிக்கு 64 நபர்கள் போட்டியிட்டனர்.

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் 98  பதவிகளுக்கு 384 பேர் போட்டியிட்டனர்.

கிராம ஊராட்சி தலைவர் 269 பதவிக்கு 922 பேர் போட்டி ..

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 1793 பேருக்கு 5666பேர் போட்டி 

போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் : 

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஒருவரும் ,  வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஒருவரும் ,  உத்தரமேரூர் ஒன்றியத்தில் இருவரும் கிராம ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 145 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments