வீட்டு உபயோக பொருட்கள் கடை மற்றும் மூன்று குடோன்களில் திடீர் தீவிபத்து
வேலூர் :
காட்பாடி வள்ளிமலை சாலையில் விடியற்காலையில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான மகாலட்சுமி வீட்டு உபயோக பொருட்கள் கடை மற்றும் மூன்று குடோன்களில் திடீர் தீவிபத்து ஏற்ப்பட்டது.
இந்த தீவிபத்தில், ஒன்றரை கோடி மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.
காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சரவணன், நிலைய அலுவலர் தணிகைவேல், நிலைய அலுவலர் பொறுப்பு முருகேசன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து வருகின்றனர்.
தீ விபத்து காரணம் குறித்து காட்பாடி வட்டாட்சியர் ஜெகன் மற்றும் காட்பாடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் காட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் கார்த்திக், பரமசிவம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தால், காட்பாடி வள்ளிமலை சாலையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.




No comments
Thank you for your comments