மாபெரும் தடுப்பூசி முகாம் - மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் பெருநகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம பகுதிகள் என 600 இடங்களில் சிறப்பு முகாம்கள் இன்று (12.09.2021) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முகாமிலும் 100 தடுப்பூசிகள் வீதம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் ஆனது காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் நடமாடும் வாகன முகாம்கள் மூலமாகவும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசி போடுவதற்காக செவிலியர்கள், தகவல்களை பதிவிடுவதற்காக தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து வர 4 நபர்கள் முறையே சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை சார்ந்த பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனா தடுப்பூசி ஆனது 100% பாதுகாப்பானது ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி நிலுவையில் இருந்தவர்கள் இந்த முகாமில் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர்.
காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்
அதன் தொடர்ச்சியாக ஒளி முகமது பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி, சிறு காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற சிறப்பு முகாமினையும், வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் ஒன்றியம் திம்மசமுத்திரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்பொழுது அங்கிருந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்தி கொள்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். கொரோனாவை தடுப்பதற்கு நம் கையில் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசியை ஆகவே அனைவரும் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
மேலும் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.பழனி, காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் திருமதி.லட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments