கொரோனா தடுப்பூசியால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பா...? மீண்டும் கிளம்பிய சர்ச்சை...
திருவள்ளுவர், செப்.29-
கடம்பத்தூர் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியை சேர்ந்த லாவண்யா (25), நேற்று காலை புதூரில் நடைபெற்ற கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில் நேற்றிரவு லாவண்யாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இன்று காலை மூச்சுத் திணறல் அதிகமாகி உள்ளது. இதனையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார்(27), கடம்பத்தூர் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியை சேர்ந்த லாவண்யா (25) ஆகிய இருவருக்கும் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது லாவண்யா நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், லாவண்யா நேற்று காலை புதூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இந்நிலையில் நேற்றிரவு லாவண்யாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டரைபெரும்புதூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
Click here 👉 வரி பங்கீடு விவாதமும் - நிதிஅமைச்சர் கூறியது சரியான பதிலா?
மீண்டும் இன்று காலை மூச்சுத் திணறல் அதிகமாகி உள்ளது. இதனையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள், கொரோனா தடுப்பூசியால்தான் கர்ப்பிணி பெண் லாவண்யா (25) உயிரிழந்தான் என்று பட்டறை பெருமந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த திருவள்ளூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) சந்திரதாசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் இதுகுறித்து கனகம்மா சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட அன்றே மூச்சுதிணறல் ஏற்பட்டு மறுநாளே கர்ப்பிணி பெண் லாவண்யா உயிரிழந்ததால் கொரோனா தடுப்பூசிதான் காரணமா என்ற சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது.
நிறைமாத கர்ப்பிணி பெண் லாவண்யா, இளம் வயதிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், கொரோனா தடுப்பூசி மீதான கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது...

No comments
Thank you for your comments