Breaking News

விரைவில் கூட்டுறவு சங்க சட்டம் திருத்தப்படும் அமித் ஷா அறிவிப்பு

புதுடெல்லி, செப்.26-

புதிய இணைப்பு சங்க கொள்கையை உருவாக்கியிருக்கிறது. அந்தக் கொள்கை விரைவில் வெளியிடப்படும். பல மாநில கூட்டுறவு சங்க சட்டம் திருத்தப்பட உள்ளது. துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கான சட்டத்தை திருத்துவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. அந்த சட்டம் திருத்தப்பட்ட பிறகு மாநிலங்களுக்கு உரிய ஆலோசனைகளை மத்திய அரசு அனுப்பி வைக்கும் அதன்படி மாநில அரசுகள் தங்கள் மாநிலத்திற்கு உரிய சட்டத்தை திருத்த வேண்டியிருக்கும் என்று மத்திய கூட்டுறவு மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.

புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார் அப்பொழுது இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வெவ்வேறு கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் 2003 பேர் பங்கு கொண்டனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் உரையில் கூறியதாவது:

கூட்டுறவுத்துறை மாநில அரசின் அதிகார பட்டியலின் கீழ் வருகிறது இந்த நிலையில் மத்திய அரசு கூட்டுறவுத்துறை என தனி அமைச்சகம் ஏன் போட வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

இந்தக் கேள்விக்கு அரசு சட்டபூர்வமான பதில்களை தயாராக வைத்துள்ளது புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய கூட்டுறவு அமைச்சகம் மாநிலங்களுடன் எந்த மோதலுக்கும் இடம் வைக்காமல் இணைந்து செயல்படும்.

பல மாநில கூட்டுறவு சங்கம் மற்றும் துவக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சட்டம் ஆகியவற்றுக்கு புதிய சட்டங்களை திருத்த திட்டமிட்டு வருகிறது.

இந்தச் சட்டங்கள் திருத்தப்பட பிறகு மாநில அரசுகளுக்கு உரிய ஆலோசனை அனுப்பி வைக்கப்படும் அந்த ஆலோசனைக்கு இணங்க மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் அமல் செய்யப்படும் கூட்டுறவு சங்க சட்டத்தை திருத்த வேண்டி இருக்கும் என்று அமித் ஷா கூறினார்.

துவக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும். சமூகத்தில் நலிந்த பிரிவினர் கடன் பெறத் தக்க வகையில் அந்த கூட்டுறவு சங்கங்களுக்கான விதிகள் திருத்தப்பட வேண்டும் அவசியம் வளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.

எதிர்பாராத தேவைகளுக்கான கடன், பண்டிகைக்கால கடன் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கும் வகையில் அவற்றை வலுப்படுத்த வேண்டும் தற்பொழுது இந்தியாவில் 65 ஆயிரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ளன இவற்றின் எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்த வேண்டும்.

கூட்டுறவு கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை புதியது அல்ல. இந்தியப் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் கூட்டுறவு கொள்கையை 2002ம் வாழ்ந்து திருத்தினார்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 இலட்சம் டாலர் மதிப்புள்ள பொருளாதாரம் ஆக உயர்த்துவது கூட்டுறவுத்துறை கணிசமான பங்காற்றிய இயலும்.

கூட்டுறவு அமைப்புகளில் வருமானத்துக்கு வரி விதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது இந்த கோரிக்கைகள் குறித்து அரசு அனைத்து விவரங்களும் அழியும் கூட்டுறவு அமைப்புகளுக்கு அநீதி இழைக்கப்படாமல் அரசு பார்த்துக் கொள்ளும்.

பால் உற்பத்தி, நுகர்வு பொருள்களான அப்பளம் போன்றவற்றின் உற்பத்தி ஆகியவற்றில் கூட்டுறவு அமைப்புக்கள் புதிய சிகரங்களைத் தொட்டு உள்ளன.

அதே நேரத்தில் அவை இன்னும் பல துறைகளில் மேம்பாடு அடைய முடியும்.

இந்தியாவில் உள்ள கிராமங்களில் 91 சதவீத கிராமங்களில் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன மொத்தம் 8.5 லட்சம் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களும் 8.5 லட்சம் கூட்டுறவு கடன் சங்கங்களும் கடன் சாராத 7 லட்சம் கூட்டுறவு அமைப்புகளும் உள்ளன.  தேசிய அளவில் 17 கூட்டுறவு அமைப்புகள் வருகின்றன. இவ்வாறு மத்திய கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.

மகாராஷ்டிரம், கேரளம், குஜராத், கர்நாடக, மாநிலத்தில் பல பகுதிகள் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு எதிரான அரசியல் கட்சிகள் கூட்டுறவுத்துறையில் அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துள்ளன.

கூட்டுறவு அமைப்புக்கள் மூலம் இந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் நேரடியாக மக்களை அணுக முடிகிறது.

பாரதிய ஜனதா கட்சி தனது செல்வாக்கை மாநிலங்களை விரிவுபடுத்துவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது அதனால் கூட்டுறவு இயக்கத்தை தன்வசப்படுத்த பாரதிய ஜனதா கட்சி மத்தியில் கூட்டுறவு அமைச்சகம் ஒன்றை உருவாக்கி அந்த பொறுப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கையில் தந்துள்ளது.

மத்திய, மாநில கூட்டு பொறுப்புகளின் கீழ் இயங்கும்  விவசாயம், ,தொழிலாளர் துறை, வரிவிதிப்பு, வருவாய் ஆகிய துறைகளில் மாநில அரசுகளின் அதிகாரத்தை திட்டமிட்ட வகையில் மத்திய அரசு பறித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதற்கு கைப்பொம்மையாக நிதி ஆயோக் அமைப்பை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments