Breaking News

கொலை வெறியில் பெண் நீதிபதிகளை தேடி அலையும் தாலிபான்கள்...

காபூல்:

ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு சிறை தண்டனை வழங்கிய  பெண் நீதிபதிகளை தாலிபான்கள் வலைவீசி தேடி வருவதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடந்த முந்தைய ஆட்சியில் தங்களுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதிகளை குறிப்பாக பெண் நீதிபதிகளை பழிவாங்க தாலிபான்கள் தேடி அலைவதாக அதிர்ச்சி மிகுந்த செய்திகள் வெளியானது.

இது குறித்து 200க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் உயிரை காப்பாற்றி கொள்ள தலைமறைவாக வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். 

இது தொடர்பாக நங்கர்ஹார் மாகாணத்தை 38 வயது நீதிபதி கூறியதாவது, எட்டு மாதங்களுக்கு பிறகு மனைவியை கொடுமை செய்த குற்றத்திற்காக தாலிபான் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தேன்.  அப்போது அவன், நான் வெளியே வந்தவுடன் உன்னை கொல்லாம விடமாட்டேன் என்று கூறினார். அப்போது நான் எதையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் இப்போது வீடு வீடாக சென்று நீதிபதிகளை பற்றி தாலிபான்கள் விசாரித்து வருகின்றனர்.

எனக்கு எனது உயிரை பற்றி கவலையில்லை. என்னால் எனது குடும்பம் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் குடும்பத்தோடு தலைமறைவாக வாழ்ந்து வருகிறோம் என்று அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தலைநகர் காபூலில்  தாலிபான்களுக்கு ஆதரவாக பெண்கள் நடத்திய பேரணி புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. தாலிபான் கொடியுடன் இவர்களால் தான் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என பல ஆதரவு வாசகங்களுடன் பெண்கள் பேரணியாக சென்றனர்.  

No comments

Thank you for your comments