பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
போலி அரசு ஆணை ரூ.4.50 லட்சம் மோசடியால் பாதிக்கப்பட்ட பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி...
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகிலுள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் , இவருக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக கூறி, விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 4 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.
மேலும் புரோக்கராக செயல்பட்ட லட்சுமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தயாரித்து வழங்க பட்டது போல போலியான பணி நியமன உத்திரவு தயார் செய்து அதில் ரமேஷ் என்பவருக்கு கனரக ஓட்டுநர் பணியிடம் நிரப்ப நேர்காணல் செய்யப்பட்ட தேதியாக 25.7.2019 ரமேஷ் என்பவர் A1 செக்ஷன் சென்டருக்கு 6552 என்ற எண்ணிற்கு நேர்காணல் செய்யப்பட்டது என்றும் வேலையில் சேரும் தேதி 28.08.2019. என்றும் , மாத சம்பளம் முப்பதாயிரம் வழங்கப்படும் என போலியான ஆவணம் தயாரித்து கொடுத்துள்ளார்.
இந்த போலி ஆணையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்ற ரமேஷ் ,அங்கு போலியான உத்தரவு என தெரிந்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து லட்சுமியை தேடி பணம் கேட்டுள்ளார்.
இரண்டு வருடமாக ஏமாற்ற பட்டு வந்ததால் இன்று விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்ணாடம் அடுத்த மேலூர் ரமேஷின் மனைவி மலர்க்கொடி என்பவர் தனது 2 குழந்தைகளுடன் வந்து மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் ரமேஷ் மனைவி மலர்கொடி என்பவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்து சென்று மேலும் விசாரணை செய்து வருகின்றனர்
இதனால் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



No comments
Thank you for your comments