கழிவுநீர் வாய்கால்களை சுத்தம் செய்த அமைச்சர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட இளமங்கலம் பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
இப்பணியினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் நேரில் சென்று ஆய்வு செய்து வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்தார்.
பின்னர் அங்குள்ள நியாய விலைக்கடையை ஆய்வு செய்து அரசு பள்ளியில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் மேலும் பள்ளி முழுவதும் ஆய்வு செய்தார்.
இதில் கூடுதல் ஆட்சியர் பவண்குமார் ஜி கிரியப்பவணர், சார் ஆட்சியர் அமித்குமார், வட்டாட்சியர் தமிழ்செல்வி, ஆய்வாளர் அன்னக்கொடி, ஒன்றிய செயலாளர்பட்டூர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் விபிபி பரமகுரு, நகர இளைஞரணி செயலாளர் சேதுராமன்,மற்றும் பலர் உடனிருந்தனர்.

No comments
Thank you for your comments