மாநிலங்களவை எம்.பி.தேர்தல்- மத்திய பிரதேசத்தில் மனுதாக்கல் செய்தார் எல்.முருகன்
போபால்:
மத்திய பிரதேச தலைமை செயலகத்துக்கு சென்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் முன்னிலையில் எல்.முருகன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சராக நீடிக்க அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல் சபையில் காலியாக இருக்கும் 2 இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதில் ஒரு இடத்துக்கு எல்.முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் வேட்புமனுதாக்கல் செய்வதற்காக தலைநகர் போபாலுக்கு இன்று சென்றார்.
விமான நிலையத்தில் மத்திய பிரதேச பா.ஜனதாவினர் அவரை உற்சாகமாக மாலை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் அவர் தலைமை செயலகத்துக்கு சென்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களின் வளர்ச்சிக்காக எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தார்.
No comments
Thank you for your comments