சின்னிவாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஜெனிபர் மார்க்ரேட் மனுத் தாக்கல்
வாலாஜாபாத், செப். 21 -
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வை சேர்ந்த எஸ்.எஸ்.சத்யாவின் மனைவி ஜெனிபர் மார்க்ரேட் மனுத் தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க., மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர் வாலாஜாபாத்தை சேர்ந்த எஸ்.எஸ்.சத்யா இருந்து வருகிறார்.
இவரது மனைவி ஜெனிபர் மார்க்ரேட். 34 வயதுடைய இவர், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இடுகிறார்.
இதற்கான வேட்பு மனுவை ஜெனிபர் மார்க்ரேட் வாலாஜாபாத் ஒன்றிய அலுவலகத்தில் தாக்கல் செய்தார். இவருடன் சின்னிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திறளாக வந்திருந்தனர்.
No comments
Thank you for your comments