பல குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை நன்னடத்தையில் இருக்க ஆணை...
வேலூர்:
வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையம் ஆய்வாளர் சுபா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மேற்பார்வையில் பல குற்ற செயல்களில் ஈடுபட்ட ஆறு நபர்களை கைது செய்தனர்.
அதேபோல் அரியூர் பகுதியில் 4 நபர்கள் கைது செய்து மாவட்ட ஆட்சியர் முன் நிறுத்தப்பட்டனர். அவர்களை இனி எந்த தவறும் செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.
பாகாயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இனி குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்து விடுக்கப்பட்டனர்.

No comments
Thank you for your comments