புதிய வழித்தடங்களில் போக்குவரத்து சேவையினை துவக்கி வைப்பு... நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
வேலூர்
வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு உட்பட் பகுதி பொதுமக்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் ரூ.7.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அப்பகுதி பொதுமக்களுக்கு புதிய வழித்தடங்களில் போக்குவரத்து சேவையினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அரக்கோணம் நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்கள், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர்ஆனந்த் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
இன்று (03.09.2021) வேலூர் மாவட்டம் , காட்பாடிக்குட்பட்ட பொன்னை பகுதியில் புதியதாக புறநகர் மற்றும் நகர பேருந்துகளை 6 வழித்தடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் 4 வழித்தடங்களில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை மாணவர்களின் நலனை கருதி அப்பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி தொடர புதிய பேருந்து சேவையினை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வள்ளிமலை, காட்பாடி பிரம்மபுரம் பகுதிகளில் வருவாய்த்துறையின் சார்பாகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்தறை சார்பாகவும், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மாநில வாழ்வாதார மகளிர் திட்டம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக 464 பயனாளிகளுக்கு ரூ.7.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வழங்கி அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் உத்திரவிட்டு மேலும் இப்பகுதியில் புதியதாக பல்வேறு அரசு நலத்திட்டங்களை விரவில் செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் அவர்கள் அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது அரக்கோணம் நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்கள், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர்ஆனந்த் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், அவர்கள், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் , மாவட்ட வருவாய் அலுவலர் க.இராமமூர்த்தி அவர்கள் மற்றும் துறைச்சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.





No comments
Thank you for your comments