மாநகராட்சி வரிவசூலில் முறைகேடு....!
தஞ்சை :
2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 135 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்க வேண்டும் ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் வெறும் 68 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்வது செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சாவூர் நகராட்சி கடந்த 2014ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு, தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கான சான்றிதழை வழங்கினார்.
இந்நிலையில் தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கமலக்கண்ணன் என்பவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆண்டுதோறும் எவ்வளவு வரி வசூல் செய்யப்படுகிறது. மேலும் எவ்வளவு தொகை இதுவரை நிலுவையில் உள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கடந்த ஜூலை 7ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார்.
இதற்கு தகவல் அளித்துள்ள தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம், சொத்துவரி, குடிநீர் வரி, பாதாளசாக்கடை வரி, வாடகை உள்ளிட்டை மூலம் 2017 - 2018 ஆண்டிற்கான வரி 20.40 கோடியும், முந்தைய ஆண்டின் நிலுவை தொகை 28.11 கோடி சேர்த்து 48.42 கோடி ரூபாய் ஆகும். ஆனால் அந்த ஆண்டு 16.23 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2018 - 2019 ஆண்டிற்கான வரி வசூலில் 27.77 கோடியும், முந்தைய ஆண்டிற்கான நிலுவை தொகை 33.02 கோடியும் சேர்த்து 60.79 கோடி ரூபாய். ஆனால் அந்தாண்டு 16.24 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 2019 - 2020 ஆண்டிற்கான வரி 22.05 கோடியும், நிலுவை தொகை 44.55 கோடியும் மொத்தம் 66.5 கோடி வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால் 19.54 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர் கமலக்கண்ணன் கூறுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் அதற்குரிய வரி தொகையும், நிலுவை தொகையும் முழுமையாக வசூல் செய்யவில்லை, மேலும் நிலுவை தொகை உள்ள போது முதலில் அதை வரவு செய்ய வேண்டும், ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அதனை செய்யவில்லை, எனவே இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும் 2019 - 2020 ஆண்டில் நிலுவை தொகை 44.55 கோடியாக இருக்க வேண்டும், ஆனால் அதிகாரிகள் 39 கோடி தான் நிலுவை தொகை உள்ளதாக தகவல் தந்துள்ளனர். அப்போது அந்த 4.5 கோடி எங்கே போனது என அவர் கேள்வி எழுப்புகிறார்.
2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 135 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்க வேண்டும் ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் வெறும் 68 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்வது செய்திருப்பதாகவும் இதில் 50 சதவீதம் வரி இன்னும் வசூல் செய்யப்படாமல் இருப்பதாகவும் இதனால் தமிழக அரசுக்கும் மாநகராட்சிக்கும் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு மாநகராட்சியிலே சுமார் 60 கோடி ரூபாய்க்கு மேல் வரி நிலையில் உள்ளது. இதேபோல் மற்ற மாநகராட்சிகளிலும் உள்ள நிலுவை தொகையை கணக்கிட்டால் தமிழகத்தின் நிதிச் சுமை என்பது மிகப்பெரிய அளவில் குறைக்கப்படும். எனவே இதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும். மேலும் கடந்த காலங்களில் வரி வசூலில் நடைபெற்ற முறைகேடுகளையும் கண்டுபிடிக்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்தாவது,
மாநகராட்சியில் வரி நிலுவை தொகை இருப்பது உண்மைதான். ஆனால் அதனை வசூல் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தான் பதவியேற்று சில மாதம் தான் ஆகிறது. தற்போது ஸ்மார்ட் திட்ட பணிகள் நிறைவடைந்து மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் ஏலம் விடபட்டு வருவதால் மாநகராட்சியின் நிதிச்சுமை தற்போது குறைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.


No comments
Thank you for your comments