4 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை...
காஞ்சிபுரம்:
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை...
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷ்ணுகாஞ்சி மற்றும் மாகரல் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான
1 ) ரமேஷ் ( 24 ) த/பெ.முனியாண்டி, எண்.74, வள்ளல் பச்சையப்பன் தெரு, காஞ்சிபுரம்,
2 ) தரணிகுமார் ( 31 ) த/பெ.முனுசாமி, எண்.22 /25, ஐதர்பேட்டை தெரு, காஞ்சிபுரம் மற்றும்
3 ) சம்பத் ( 33 ) த/பெ.ஆனந்தன், எண்.222 மந்தவெளி தெரு, களக்காட்டூர் கிராமம், வாலாஜாபாத் தாலுக்கா
ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச ன்படி விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும்,
மணிமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடியான
4) பொன்னையா ( 26 ) த/பெ.ரங்கபோச்சியம், எண்.2/49, அம்பேத்கர் நகர், மாடம்பாக்கம் கிராமம், குன்றத்தூர் தாலுக்கா என்பவர் மீது பிரிவு 107 கு.வி.மு.ச - ன்படி மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும்
வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

No comments
Thank you for your comments