Breaking News

நிறைவு பெற்றது வேட்புமனு தாக்கல்... காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிலவரம்

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 13 ஒன்றியங்களில் உள்ள 27 மாவட்ட கவுன்சிலர் பதவி, 252 ஒன்றிய கவுன்சிலர் பதவி, 633 ஊராட்சி மன்ற தலைவர் பதவி, 4617 வார்டு உறுப்பினர் பதவி எற மொத்தம் 5529 பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு. 

தற்போதைய நிலவரப்படி சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

இன்று மட்டும் 2 மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

நாளை மற்றும் நாளை மறுநாள் பெறப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கும்.25 -ம் தேதி வாபஸ் பெற கடைசி நாள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் செங்கல்பட்டு மாவட்டத்தில் புனித தோமையார் மலை திருப்போரூர் திருக்கழுக்குன்றம் லத்தூர் ஆகிய ஒன்றியங்களுக்கு 6-ம் தேதியும்; 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் மதுராந்தகம் அச்சரபாக்கம் ஆகிய ஒன்றியங்களுக்கு 9-ம் தேதியும் என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

No comments

Thank you for your comments