ஐஏஎஸ் தேர்வு பயிற்சி படிக்கும் இளம் பெண் தனியாக வந்து வேட்புமனு தாக்கல்
காஞ்சிபுரம்:
ஐஏஎஸ் தேர்வு பயிற்சி படிக்கும் பொறியியல் பட்டதாரி இளம் பெண் தனியாக வந்து வேட்புமனு தாக்கல்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 15ஆம் தேதி துவங்கி இன்று நிறைவு பெறுகிறது.
இறுதி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். காலை முதலே அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் தங்கள் ஆதரவு பொதுமக்களுடன் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் காலூர் பகுதியில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 15வது வார்டு கான வேட்புமனுவை பட்டதாரி இளம்பெண் அ. ஜெயப்பிரியா(27) தாக்கல் செய்தார்.
இவர் ஐஏஎஸ் பயிற்சி பெற்று வரும் பொறியியல் பட்டதாரி ஆவார். திருமணமாகி இருபது நாட்கள் ஆன நிலையில் தனியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கடந்த காலங்களில் காஞ்சிபுரம் மாவட்ட இளம் பெண்கள் பாசறை துணை செயலாளராக தான் பணிபுரிந்த வந்ததாகவும், தனது தகப்பானரும் அதிமுக நிர்வாகி ஆவார். இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுவதாக தெரிவித்தார்.

No comments
Thank you for your comments