Breaking News

நீட் எழுதிய மாணவி மாயமான வழக்கில் தீடீர் திருப்பம் - காவல் நிலையத்தில் தஞ்சம்

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நீட் தேர்வு எழுதிய நிலையில் மாயம் ஆன மாணவி தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல்நிலையத்தில் காதலுடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள சின்னஅரியாகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்பாண்டியன் (40), அரசு மதுபானக்கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி தங்கம். இவர்களுக்கு சுவேதா (17) என்ற மகளும், சரண் (16) என்ற மகனும் உள்ளனர்.

நீட் தேர்வு எழுதிய நிலையில் கடந்த 17ம் தேதி சுவேதா மாயமாகியுள்ளார். இது குறித்து, நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில்பாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி ராசிபுரம் டிஎஸ்பி., செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மேற்கு மண்டலம் முழுவதும் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் போலீசார் மாணவியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் மாணவி ஸ்வேதா தனது காதலனுடன் தஞ்சம் அடைந்துள்ளார்.  

இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர்  தெரிவித்துள்ளார்.


 

No comments

Thank you for your comments