Breaking News

திமுக வேட்பாளர் எஸ்.நித்யா சுகுமார் தனது வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசிபெற்ற திமுக வேட்பாளர் எஸ்.நித்யா சுகுமார்  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

தமிழகத்தில் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலானது வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி காஞ்சிபுரத்தில் வேட்பாளர்கள் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  திமுக தலைவரும்-தமிழ்நாடு முதலமைச்சரும்மான  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர்-காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் MLA அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரும்மான எஸ்.நித்யா சுகுமார்  காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதிவிக்கு போட்டியிட இன்று காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுத்தாக்கல் செய்யும் முன்பு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் - உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாணவரணி செயலாளருமான, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடம் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments