கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கோவில் நிலம்... உச்சநீதிமன்றம் தடை
புதுடெல்லி, செப்.21&
புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக நாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை வீர சோழபுரத்தில் அரசு கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் பேரில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நசீர் மற்றும் கிருஷ்ணமுராரி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.
2020ஆம் ஆண்டு வீர சோழபுரத்தில் உள்ள நாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொள்ள அரசு முடிவு செய்தது அந்த 35 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.1.98 கோடி என்று முடிவு செய்தது. இதன் அடிப்படையில் 19&9&2020 ல் அரசாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டது. அரசின் ஆணையை எதிர்த்து சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் அரசுக்குக் கடிதம் அனுப்பினார் நிலத்தின் மதிப்பு குறைவாக காட்டப்பட்டுள்ளது அத்துடன் கோவில் நிலத்தை விற்பனை செய்வதற்கு கோவில் நிர்வாகத்திற்கு உரிமை இல்லை அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதல் அவசியம் என்று ரங்கராஜன் நரசிம்மன் சுட்டிக்காட்டினார். அதைத் தொடர்ந்து மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது புதிய அரசு ஆணையின்படி அரசு கைக்கொள்ள தீர்மானித்த நிலத்தின் மொத்த மதிப்பு ரூபா 12.89 கோடியாகும். இதில் 0.01 அத வீதத்தை நில குத்தகை வாடகை மதிப்பாக கொண்டு மாத வாடகை 1.3 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டது குத்தகை காண கால அவகாசம் எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவில் கூறப்பட்ட ஆட்சேபனைகளை சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை அதற்குப் பதிலாக மாதாந்திர வாடகை தொகையை மார்க்கெட் நிலவர அடிப்படையில் தீர்மானித்து செய்யும் படி உத்தரவிட்டது. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் மனு தாக்கல் செய்தார் அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ணமுராரி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

No comments
Thank you for your comments