பிரதமர் மோடியுடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா சந்திப்பு
புதுடெல்லி
பிரதமர் மோடி அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
பிரதமர் மோடி குவாட் மற்றும் ஐ.நா. சபையில் உரையாற்ற அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். பின்னர் இந்தியா திரும்பினார்.
இந்த நிலையில் இன்று இரவு பிரதமர் மோடி வீட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் சென்றனர். பின்னர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினர். அடுத்த வருடம் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.
New Delhi: Union Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh and BJP chief JP Nadda leave from PM Narendra Modi's residence after holding a meeting pic.twitter.com/6yO6JAr5xl
— ANI (@ANI) September 26, 2021
No comments
Thank you for your comments