பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் திமுகவினர் மலர்தூவி மரியாதை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர்அண்ணா அவர்களின் 113வது பிறந்த நாளையொட்டி பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்களும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஒன்றியச் செயலாளர்கள் பி.எம்.குமார், எஸ்.பி.பூபாலன், படப்பை ஆ.மனோகரன், எஸ்.டி.கருணாநிதி, நா.கோபால் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.



No comments
Thank you for your comments