அரசு உதவித் தொகை பெற தனியார் கல்லுாரி, தொழிற் கல்லுாரி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம், செப். 1 –
அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பி.சி., - எம்.பி.சி., - டி.என்.சி ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம், என, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்,
இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ – மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.சி., - எம்.பி.சி., டி.என்.சி., ஆகிய வகுப்பை சேர்ந்த மாணவ – மாணவியருக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ – மாணவிகள் கல்வி உதவித் தொகை விண்ணப்படிக்கும் விண்ணப்ப படிவங்களை அவரவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று இம்மாதம் 30ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளவேண்டும். புதியது இனங்களுக்கு வரும் நவம்பர் மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிறுவனங்களில் சமர்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.
கல்வி உதவித் தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு அடுத்த மாதம் 15ம் தேதி முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்படங்கள் 2021 டிசம்பர் 31ம் தேதிக்குள் இணையதள மூலம் கோப்புக்கள் சமர்பிக்கப்படவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகலாம்.
அரசு இணையதளம்https://www.tn.gov.in/bcmbcdeptt மூலம் இத்திட்டங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்’ இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments