நில தகராறு...செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை முயற்சி..முன்னால் மின்சார ஊழியர்
பர்கூர் :
பர்கூர் அருகே நில தகராறு காரணமாக முன்னால் மின்சார ஊழியர் செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை முயற்சி... பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த புதுரோடு கிராமத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் துரைசாமி மற்றும் அவரது உடன் பிறந்த சகோதரர்கள் இடையே நில தகராறு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் துரைசாமிக்கும் அவரது சாகோதருக்கும் இடையே காலை தகராறு ஏற்ப்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த துரைசாமி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் பி.எஸ்.என்.எல் செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதனை அருகிலிருந்த பொதுமக்கள் பர்கூர் தீயணைப்பு அலுவலர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் தகவலளித்துள்ளனர். தகவலின்பேரில் விரைந்து வந்த பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் துரைசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீயணைப்பு துறையினர் உதவியுடன் தற்கொலைக்கு முயன்ற துரைசாமியை உயிருடிடன் மீட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


No comments
Thank you for your comments