Breaking News

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை ... ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

பெண்ணாடம்:

பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை செய்தனர். சோதனையில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம்  பெண்ணாடத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையின் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மெல்வின் ராஜ் சிங் மற்றும் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் அமுதா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலர் சண்முகம் கடந்த 11 மாதங்களாக பெண்ணாடம் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். மேலும் பெண்ணாடம் சார்பதிவாளர் சண்முகம் மற்றும் அவருடன் கூடிய அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது. சார்பதிவாளர்கள் மற்றும் அலுவலர்கள் மீது அதிக அளவில் புகார்கள் வந்ததின் அடிப்படையில் தீடீர் சோதனை நடத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் சில ஆவனங்கள் கைப்பற்றியதாகவும் மேலும் இதுகுறித்து சார்பதிவாளர் சண்முகம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதால் பெண்ணாடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments