Breaking News

ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டு செல்லும் பொதுமக்கள்... ஒரு சில கிராமங்களில் மருந்துகள் தட்டுப்பாடு

கடலூர்:

கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம பகுதிகள் என 30 இடங்களில் சிறப்பு முகாம்கள் இன்று (12.09.2021) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

ஒவ்வொரு முகாமிலும் 100 தடுப்பூசிகள் வீதம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் ஆனது காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் நடமாடும் வாகன முகாம்கள் மூலமாகவும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசி போடுவதற்காக செவிலியர்கள், தகவல்களை பதிவிடுவதற்காக தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து வர 4 நபர்கள் முறையே சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை சார்ந்த பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்த கொரோனா தடுப்பூசி ஆனது 100% பாதுகாப்பானது ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி நிலுவையில் இருந்தவர்கள் இந்த முகாமில் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர். 

மங்களூர் ஊராட்சி ஒன்றிய உட்பட்ட கண்டமத்தான், புலிகரம்பூர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மங்களூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டார். 

அப்பொழுது அங்கிருந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்தி கொள்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். கொரோனாவை தடுப்பதற்கு நம் கையில் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசியை ஆகவே அனைவரும் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். 

மேலும் மங்களூர் ஊராட்சி ஒன்றியம் ஒலிபெருக்கி மூலம் அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம் பொதுமக்கள் அதனை பயன்படுத்தி மிக ஆர்வத்துடன் வந்துள்ளனர்.

ஆனால் சுகாதாரத் துறையினர் ஒரு சில கிராமங்களில் மருந்துகள் பற்றாக்குறையாக கொண்டு வந்ததால் பொது மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

No comments

Thank you for your comments