Breaking News

அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணின் கை நரம்பில் சிக்கிய "ஊசியின் பிளாஸ்டிக் உறை"... நேர்ந்த அவலம்..

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்  பிரசவித்த பெண்ணின் கை நரம்பில் சிக்கிய "ஊசியின் பிளாஸ்டிக் உறை". கண்டறிய முடியாததால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த நெமிலி கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்தி. இவர் பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை  பிறந்துள்ளது. 

அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில் பயிற்சி மருத்துவர் மற்றும் செவிலியரின் கவனக்குறைவால் ஆனந்தியின் வலது கையில் உள்ளங்கையின் பின்புறம் உள்ள நரம்பில் போடப்பட்டிருந்த ஊசியை அப்புறப்படுத்தும் பொழுது அந்த ஊசியில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் உறை ஆனந்தியின் நரம்பிற்க்குள் பாதி சென்றுவிட்டது எனத் தெரிகிறது. 

இதுதொடர்பாக ஆனந்தியின் கணவர் சுரேஷ் இடம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் எதுவும் சொல்லாமல் ஆனந்தியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்து சென்று கையில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் உறையை அப்புறப்படுத்துவதற்கு லேசான அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். 

அப்பொழுதும் அந்த பிளாஸ்டிக் உறை வெளிவரவில்லை.  அதன் பிறகு மூன்று முறை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போதும் பிளாஸ்டிக் உறை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. இதன் காரணமாக அவசர அவசரமாக ஆனந்தியை மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரத்திலிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

இதுகுறித்து ஆனந்தியின் கணவர் சுரேஷ் கூறும்போது என் மனைவியின் கையில் அறுவை சிகிச்சை செய்தது கூட எனக்கு தெரியாது. திடீரென காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள், என் மனைவியின் கையில் ஓசையுடைய பிளாஸ்டிக் உறை சிக்கியிருப்பது தொடர்பாக யாரும் என்னிடம் எந்த ஒரு விளக்கமும் கூறவில்லை என்றார். 

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டால், அந்த பிளாஸ்டிக் உறை கீழே விழுந்து இருக்கும் அச்சப்பட தேவையில்லை இருப்பினும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்கள் என்றார்.

No comments

Thank you for your comments