வேகமெடுக்கும் வேட்ப மனு தாக்கல்...
காஞ்சிபுரம்:
நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கிய நிலையில் வேட்பு மனு தாக்கலின் ஐந்தாம் நாளான இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளடக்கிய உத்திரமேரூர், குன்றத்தூர் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வேட்புமனு தாக்கல் சுறுசுறுப் படைந்த்து.
இதேபோன்று காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளர் உள்ளிட்ட ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் திருப்பெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஒன்றிய அலுவலகங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


No comments
Thank you for your comments