Breaking News

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தென்காசி:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

ஆலங்குளம்         தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் ஆலங்குளம் அருகே உள்ள நாகல்குளம் குளத்தில் வடகிழக்கு பருவமழை போலி ஒத்திகை பயிற்சி நடந்தது.

காவல்துறை வருவாய்த்துறை முன்னிலையில் நடந்த  ஒத்திகை பயிற்சிக்கு ஆலங்குளம் நிலைய அலுவலர் சுடலை வேல் தலைமை வகித்தார். 

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முறைகள் குறித்தும், எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வெள்ள பாதிப்பில் தப்பிப்பது குறித்தும் பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரர்களால் நேரடி ஒத்திகை செய்து காட்டப்பட்டது.

No comments

Thank you for your comments