மகனால் தந்தைக்கு நேர்ந்த விபரீதம்...போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பரவலூர் மூலக்காடு ராமதாஸ் நகரை சேர்ந்த மகாலிங்கம் வயது 63. இவர் கூலி தொழிலாளி இவரது மகன் அறிவுச்சுடர் வயது 35 இவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இவரை இரவு நேரத்தில் சங்கிலியால் கட்டி வைத்து இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு கவன குறைவு காரணமாக அவரை சங்கிலியால் கட்டி வைக்க மறந்துவிட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் அவரது தந்தை மகாலிங்கம் தூங்கிக் கொண்டிருந்தபோது மகன் அறிவுச்சுடர் மரக்கட்டையால் மகாலிங்கத்தை கடுமையாக தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த வந்த விருத்தாசலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி இறந்த மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
அதனை தொடர்ந்து அறிவுச்சுடரை கைது செய்து மனநிலை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

No comments
Thank you for your comments