அமெரிக்கா சீனாவுக்கு ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை
ஐநா சபை,
நடந்து வரும் ஐநா பொது பேரவை கூட்டம் தொடர்பாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவன செய்தியாளரிடம் பேசும்பொழுது, அமெரிக்காவும் சீனாவும் தங்கள் உறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் புதிய பனிப்போர் வெடிக்கும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெர்ஸ் எச்சரிக்கை விடுத்தார்.
இரண்டு மிகப்பெரிய பொருளாதார சக்திகள் பருவநிலை மாறுதல் சர்வதேச வர்த்தகம் தொழில் நுணுக்கம் தொடர்பாக இணக்கமாக கருத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மனித உரிமை மீறல் தொடர்பாக அரசியல் கருத்து மோதல்கள் வலுத்து வருகின்றன பொருளாதார சிக்கல்கள் இன்னும் அதிகமாகி வருகின்றன ஆன்லைன் பாதுகாப்பு என்பது மிகவும் கடினமாகிறது தென்சீனக் கடலில் போக்குவரத்து சுதந்திரம் என்பது மேலும் கடினமாகி வருகிறது.
இந்த சூழலில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை ஒத்துழைக்க வேண்டும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டு நாடுகளும் மோதலில் தான் கவனமாக இருக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெர்ஸ் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இணைந்து செயல்படும் உறவை நாம் மீண்டும் ஏற்படுத்தி ஆகவேண்டும் இன்று தடுப்பூசி பருவநிலை மாறுதல் மற்றும் பிற உலகு தழுவிய சவால்களுக்கு பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு இடையேஆக்கபூர்வமான உறவுகள்இல்லாவிட்டால் தீர்வுகளை உருவாக்க முடியாது.
அமெரிக்காவும் சீனாவும் போட்டி இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன இதே சூழ்நிலை நீடிக்கும் பட்சத்தில் உலகம் பொருளாதார ராணுவ அடிப்படைகளில் பிரிந்து போகும் சூழ்நிலை உள்ளது இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மேலும் உடைந்து சிதறும் உள்ளார் உறவுகளை செய்தாக வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் எச்சரித்தார்.
No comments
Thank you for your comments