Breaking News

காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு - டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்

சென்னை

தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பை டிஜிபி சைலேந்திரபாபு இணையவழி காணொலி காட்சி மூலம் நேற்று துவங்கி வைத்தார். 

தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களுக்கு பயிற்சியளிக்கும் தகுதியை காவல்துறை அதிகாரிகள் பெறும் வகையில், காவல் துறையில் பயிற்சி ஆசிரியர்களை உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழக காவல்துறையில் 246 மனநல பயிற்சி ஆசிரியர்களுக்கு பட்டயப் படிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதற்கான பயிற்சி நேற்று துவங்கியது. சுமார் 3 மாதங்கள் இணையவழி காணொலி காட்சி மூலம் இந்த பயிற்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா நேற்று டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய மனநல மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் பிரதிமா மூர்த்தி கலந்து கொண்டு காணொலி மூலம் உறையாற்றினார்.

தமிழக டிஜிபி லைலேந்திரபாபு பயிற்சி தொடர்பான சிற்றேட்டை வெளியிட்டு தொடக்க உறையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘காவலர் நலன் ஏடிஜிபி சைலேஷ் குமார் யாதவ் மேற்பார்வையில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் ஈடுபடும் 246 நபர்களில், 112 பேர், காவல் அதிகாரிகள் மற்றும் 134 பேர் மனநல ஆலோசகர்கள் ஆவார்கள். இவர்கள் பட்டயச் சான்றுகள் பெற்றபின் தமிழகத்தைச் சார்ந்த 1.3 லட்சம் காவல் ஆளினர்களுக்கும், 3 லட்சம் காவலர் குடும்பத்தினருக்கும், நிறை வாழ்வுப் பயிற்சி வழங்குவார்கள். இந்த பயிற்சி அனைத்து காவல் ஆணையரகங்களிலும், மாவட்ட தலை நகரங்களிலும் நடைபெறும்”

இவ்வாறு, டிஜிபி லைலேந்திரபாபு தெரிவித்தார்.

No comments

Thank you for your comments