கால்வாய் கட்டும் பணி தேக்கம்... மழை நீர் செல்ல வழியின்றி சாலை தேங்கும் அவலம்... தொற்று பரவும் அபாயம்...
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட அணைக்கட்டுச் சேரி கிராமத்தில் மழைநீர் கால்வாய் கட்டாமல் அப்படியே நின்றுவிட்டதால் அப்பகுதியில் மழை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கும் அவலநிலை நீடிக்கின்றது.. தற்பொழுது சிலர் ஆகிரமித்தும் வருகின்றனர்.. மழைக்காலம் என்பதால் மழை நீர் தேங்குவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட அணைக்கட்டுச் சேரி கிராமத்தில் இருந்து மேல்பாக்கம் வரை சாலை அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்று முடிவடைந்தது.
இதற்கிடையில் சோரஞ்சேரி அணைக்கட்டு சேரி கண்ணம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் அடங்கும்... சாலை ஓரத்தில் மழைநீர் கால்வாய் கட்டும் பணியும் நடைபெற்று கொண்டிருந்தது. தற்போது அந்தப் பணி பாதிலேயே நின்றுவிட்டது..
இந்நிலையில், மழைநீர் கால்வாய் கட்டாமல் அப்படியே நின்றுவிட்டதால் அப்பகுதியில் மழை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கும் அவலநிலை நீடிக்கின்றது.. தற்பொழுது சிலர் ஆகிரமித்தும் வருகின்றனர்..
முடிக்கப்படாத கால்வாய்க்கு இரண்டு ஆண்டிற்கு முன்னரே பல லட்சங்கள் பில்லை போட்டு வாரி சுருட்டி கொண்டனர் என்று நெடுஞ்சாலைதுறை மீது அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் பட்டாபிராமில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் குறுக்கே பாலங்கள் கட்டாமலே சாலைகள் போட்டு விட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு பாலங்களை கட்டி முடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த ஆட்சியில் செய்யாத வேலைக்கு பில் போட்டதால், தற்போது அந்த வேலை பாதியில் நிறுத்தப்பட்டு வருகிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணியை முடித்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments
Thank you for your comments