Breaking News

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு - மநீம கமல்ஹாசன்

சென்னை

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள விவரம்

உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 'டார்ச்லைட்' சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்  என்று கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 

No comments

Thank you for your comments