இடியுடன் கூடிய பலத்த மழை... பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம்:
ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அவதியுற்று வந்த நிலையில் மாலைப்பொழுதில் சில்லென்று காற்று வீசியபோது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக விடிய விடிய பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் ஓரிக்கை செவிலிமேடு ஒலிக்கும்போது பேட்டை காந்தி சாலை மூங்கில் மண்டபம் வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது .
இதனால் நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உயரும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்... இருப்பினும் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதுமாக குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு வருகிறது.

No comments
Thank you for your comments