கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு
ஆலங்குளம், செப்.12:
ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஊசி முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
கொரோனா 3ம் அலை பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இந்த தடுப்பூசி முகாமினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்ய காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் எல்லநாயக்கன்பட்டி, வல்லநாடு ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் வருகை தந்தார். அங்கு சமாதானபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து தென்காசி மாவட்டம் வந்த போது ஆலங்குளத்தில் மாவட்ட திமுக கழகம் சார்பில் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், நெல்லை எம்பி ஞான திரவியம் ஆகியோர் தலைமையில் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ், தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாத ன்,ஞானதிரவியம் எம்பி, தாசில்தார் பரிமளா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி, தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அனிதா,பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், வட்டார மருத்துவ அலுவலர் குத்தாலராஜ், டாக்டர்கள் கீர்த்திகா, முகமது தாரிக், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பன், சுகாதார ஆய்வாளர் கணேசன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.எம் அன்பழகன்,நகர செயலாளர் நெல்சன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சமுத்திரபாண்டியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் கணேஷ் பாண்டியன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், எஸ்ஐ தினேஷ் பாபு மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


No comments
Thank you for your comments