அதிமுக பெண் வேட்பாளர்கள் ஒன்றாக வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம்
ஆலயத்தில் வணங்கிவிட்டு, அதிர்வேட்டுகள் முழங்க, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அதிமுக பெண் வேட்பாளர்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று திமுக, அதிமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கும், மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பதவிக்கும், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 14 பெண் வேட்பாளர்கள் உள்பட 20 வேட்பாளர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு போட்டியிடும் லலிதாபாய், மற்றும் ஒன்றிய கவுன்சிலர் போட்டியிடும் சுமதி ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில் விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி விட்டு, அதிர்வேட்டுகள் முழங்க, ஊர்வலமாக வந்து காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்கள் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.
அதிமுக பெண் வேட்பாளர்கள் மங்களகரமாக ஒன்றாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments
Thank you for your comments