Breaking News

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பு எப்போது? -அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

சென்னை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு  ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து செப்டம்பர் 30ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை நடத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  மூன்றாவது அலை எப்போது தாக்கும் என்பது நிபுணர்களே யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. 

*Advt

இந்த நிலையில் எந்த அலையையும் நெருங்க விடாத வண்ணம், தமிழக அரசு ஆர்டிபிசிஆர் டெஸ்ட, தடுப்பூசி போடுவது போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  இதனால் எந்தவொரு பாதிப்பும் இல்லை.

1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதில் மிக கவனமாக தொற்று அதிகமுள்ள கேரள எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டந்தோறும் மருத்துவ குழுக்கள் அமைப்பது, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது, பெற்றோர்களுக்கும் சேர்த்து மனநல ஆலோசனை வழங்கவும் மனநல ஆலோசனை நடத்தவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அரசு நடத்திய ஆலோசனையின் இன்று அறிக்கை வழங்கப்படவிருக்கிறது, அனேகமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் இன்றோ நாளையோ வெளியிடப்படலாம். மாணவர்களுக்கு விருப்பம் இல்லையெனில், வகுப்பறைக்கு வராமல் வீட்டிலேயே படிக்கலாம் என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கியிருக்கிறார்.

No comments

Thank you for your comments