பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது.
பொறியியல் படிப்பில் சேருவதற்காக மாணவர்கள் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிகலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சுமார் 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர்.
ஏற்கனவே பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் இன்று தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய 1 லட்சத்து 38 ஆயிரத்து 533 பேர் சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர். அந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1.40 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியாக மதிப்பெண்களை அறியலாம்.
அதன்படி https://www.tneaonline.org/ என்கிற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய கட்டாப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
கலந்தாய்வு
இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக, அரசுப் பள்ளிமாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 17 முதல் 24-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.
பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 17-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.
முன்னதாக, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த, 529 பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் விண்ணப்பித்திருந்தன.
இதில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உரிய சான்றிதழை சமர்ப்பிக்காததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அங்கீகார விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றன. போதிய உள்கட்டமைப்பு, தகுதியான ஆசிரியர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏஐசிடிஇ மறுத்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பதால், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டை விட தற்போது 11 ஆயிரத்து 284 பொறியியல் இடங்கள் குறைந்துள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம் 👉 https://www.tneaonline.org/
Click here to Login 👉 https://www.tneaonline.org/user/login
No comments
Thank you for your comments