ஊரக உள்ளாட்சி தேர்தல்... 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்
சென்னை, செப்.23-
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 97,831 பேர் வேட்பு மனுச் செய்துள்ளனர். மாநிலத் தேர்தல் ஆணையம் வேட்பு மனு பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளான 22.9.21ம் தேதி நேற்று அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒட்டுமொத்தமாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை விவரம் இன்று (வியாழக்கிழமை) அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பதவி வாரியாக வேட்புமனுக்கள் விவரம்:
கிராம ஊராட்சித் தலைவர் - 15,967 வேட்பு மனுக்கள்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - 72,071 வேட்பு மனுக்கள்
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 1,122 வேட்பு மனுக்கள்
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - 8,671 வேட்பு மனுக்கள்
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. அதன்பிறகு முறையான வேட்பு மனுக்களின் பட்டியல் வெளியாகும். வேட்புமனு திரும்பப்பெற நாளை மறுநாள் (சனிக்கிழமை) கடைசிநாளாகும்.

No comments
Thank you for your comments