8 குற்றவாளிகளுக்கு ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க ஆணை...
காஞ்சிபுரம்:
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 8 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இதனடிப்படையில், விஷ்ணுகாஞ்சி மற்றும் காஞ்சி தாலுக்கா காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு
1 ) சவுந்தரராஜ் த/பெ.முருகன், யதோத்தகாரி தெரு, பொய்யாகுளம், காஞ்சிபுரம்,
2 ) லோகேஷ் ( 22 ) த/பெ.குமரவேல், எண்.21, வரதராஜபுரம் பின்புறம், காஞ்சிபுரம்,
3 ) ஞானம் ( எ ) ஞானசேகரன் ( 26 ) த/பெ .சக்கரவர்த்தி, திருப்பருத்திக்குன்றம், காஞ்சிபுரம்,
4 ) மோகன்குமார் ( எ ) வெள்ளை மோகன் ( 26 ) த/பெ.ஏழுமலை, எண்.110, ARS அவென்யூ சாலை, அசோக்நகர், காஞ்சிபுரம்
5 ) தளபதி ( எ ) செல்லா ( 23 ) த/பெ.சின்னபையன், எண்.290, KTS மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம்,
6) பவுல்சன் (36) த/பெ.ஜார்ஜ் எண்.62, காரைபேட்டை கிராமம், காஞ்சிபுரம்,
7 ) சதீஷ் ( 20 ) த/பெ.பாலாஜி, எண்.204, கவரை தெரு, திருக்காலிமேடு, காஞ்சிபுரம்,
ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச - ன்படி விஷ்ணுகாஞ்சி, காஞ்சி தாலுக்கா காவல்நிலைய காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படியும் மற்றும் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடியான
8) சுரேஷ் ( எ ) மிலிடரி சுரேஷ் ( 36 ) த/பெ.ஜெயபால், பிராமினர் தெரு, முசரவாக்கம் கிராமம்,
ஆகியோர் மீது பிரிவு 107 கு.வி.மு.ச - வின்படி பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும், வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
✒ செய்தியாளர் E. ஜாபர்








No comments
Thank you for your comments