8 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை:
தமிழ்நாடு காவல்துறையில் ஜெயந்த் முரளி, அபய்குமார் சிங், நிஷா உள்ளிட்ட 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக ஜி. கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்துவந்த ஜெயந்த் முரளி, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங், ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக ஐபிஎஸ் அதிகாரி நிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments
Thank you for your comments