Breaking News

காஞ்சிபுரத்தில் 60,040 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (12.09.2021) நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 60,040 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி  அவர்கள் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா நோயைத் தடுப்பதற்காக மெகா தடுப்பூசி முகாம் அரசால் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி 12.09.2021 ஞாயிறு அன்று நடக்க திட்டமிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரங்கள் மற்றும் நகராட்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி. ஒவ்வொரு வட்டாரத்திலும் முறையே 100 முகாம்கள் நடைபெற்றன. 

ஒவ்வொரு முகாம்களிலும் தடுப்பூசியை போடுவதற்காக தகுந்த எண்ணிக்கையில் செவிலியர்களும், தகவல் பதிப்பாளர்களும் பயனாளிகளை முகாமிற்கு அழைத்து வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தகுந்த பணியாளர்கள் அனைத்து தடுப்பூசி பணியில், மருத்துவம், உள்ளாட்சி, சத்துணவு, பள்ளிகல்வித்துறை மற்றும் வருவாய்துறையைச் சார்ந்த பணியாளர்கள் தடுப்பூசி பணியில் ஒன்றிணைந்து மேற்கொண்டனர்.  

இந்த மொகா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசால் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இலக்கு 29,246. ஆனால் தடுப்பூசி செலுத்திய நபர்களின் எண்ணிக்கை 60,040 ஆகும்

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்க்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு முன்னேற்பாடு நடவடிக்கைகள் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களின் ஒருங்கிணைந்த ஈடுபாடு மற்றும் பயனாளிகளின் பங்களிப்பின் மூலம் தாங்களே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டதால். இலக்கை தாண்டி தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments

Thank you for your comments