நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி- ரூ.10 லட்சம் நிதி உதவி
சேலம்:
நீட் தேர்வுக்கு பயந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி. பெற்றோருக்கு ஆறுதல் கூறிய ரூ.10 லட்சம் நிதி உதவியை வழங்கினார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கூழையூரை சேர்ந்த மாணவன் தனுஷ். ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத உள்ள நிலையில் அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு தனி விமானத்தில் வந்து மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது- நீட்தேர்வு நிரந்தரமாக வேண்டாம். நீட் தேர்வால் ஒட்டு மொத்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தான் திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம். இதற்கு முயற்சி எடுப்போம் என்றும் தெரிவித்து இருந்தோம்.
இதுபோல அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நீட் தேர்வு நிராகரிக்கப்பட வேண்டும். சட்டசபையில் மீண்டும் மசோதா நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து 120 நாட்கள் தான் ஆகிறது. குறுகிய காலத்தில் சட்டப் போராட்டம் நடத்த இயலவில்லை. தமிழக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் பேசி. ஒன்றிய அரசிடம் இது குறித்து வலியுறுத்த உள்ளனர். இது ஒரு மாணவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, எல்லா வீட்டு மாணவர்களின் பிரச்சனையாகும். எனவே தான் நீட் தேர்வு நிச்சயம் வேண்டாம் என தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
திமுக ஆட்சி மாணவர்களுக்கு துணையாக இருக்கும். எனவே மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என கூறினார். அப்போது அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், பாராளு மன்ற உறுப்பினர்கள் பார்த்திபன், செந்தில், மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, சிவலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

No comments
Thank you for your comments