Breaking News

கொரோனாவில் 3 வது அலை ஆட்டம் தொடங்குகிறதா...? - இரு தினங்களாக கொரோனா பரவல் அதிகரிப்பு

சென்னை: 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான பரிசோதனையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் 2ஆவது அலை ஓய்ந்துவிட்டது. ஆனால் இது உச்சகட்ட பாதிப்பை அளித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அளவுக்கு அதிகமாக பரவியதால் ஒரே நேரத்தில் நிறைய பேர் மருத்துவமனைக்கு சென்றனர்.  இதனால் படுக்கை கிடைக்கவில்லை. ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நிலவியது. 

இதையடுத்து தற்போது 3ஆவது அலை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இன்னும் 100 நாட்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தற்போது இந்தியாவில் தினந்தோறும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தினாலும் அதை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை.... 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்து கிட்டதட்ட வெறுத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

இந்த 3ஆவது அலையால் மேற்கு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 7ஆம் தேதி 1,544 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது. சென்னையில் மட்டும் 194 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி தமிழகத்தில் கொரோனா டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்டானது லேசாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோவையில் 2 சதவீதமும் கிருஷ்ணகிரியில் 2 சதவீதமும் தஞ்சாவூரில் 1.8 சதவீதமும் மதுரையில் 0.3 சதவீதமும் தேனியில் 0.2 சதவீதமும் விருதுநகரில் 0.2 சதவீதமும் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் உள்ளது.

நேற்றைய தினம் தமிழகத்தில் 1631 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டிபிஆர் ரேட் 1 சதவீதமானது. 20 நாட்கள் கழித்து 1600 மேல் கொரோனா கேஸ்கள் உயர்ந்துள்ளன. சென்னையில் 174 பேருக்கும், செங்கல்பட்டில் 133 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும் திருப்பூரில் 113 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

தற்போது 1 முதல் ஒன்றரை லட்சம் பேர் வரை கொரோனா பரிசோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். கொரோனா பரவல் லேசாக அதிகரிப்பதால் இந்த பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனையை நடத்தி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் தடுப்பூசியை போட்டால்தான் கொரோனாவால் ஏற்படும் இறப்புகளை தவிர்க்கலாம் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.

No comments

Thank you for your comments