Breaking News

செப்.15 ல் கைத்தறி பட்டு பூங்கா தொடக்கம்... அமைச்சர்கள் நேரில் ஆய்வு

 காஞ்சிபுரம்

அதிமுக ஆட்சியில் 12 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த காஞ்சிபுரம்  கைத்தறி பட்டு பூங்கா 25% சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படத் துவங்குகிறது.


இந்தியாவின் முதல் கைத்தறி பட்டு பூங்கா என்ற பெருமையை பெறவுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவினை  ஊரக தொழிற்துறை அமைச்சா்  தா.மோ.அன்பரசன் அவா்கள் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அவா்கள் இன்று (11.09.2021) ஆய்வு மேற்கொண்டனர்

பட்டு சேலைகளுக்கு உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் மேல்கதிர்பூர் பகுதியில் மத்திய, மாநில, அரசுகள் மற்றும் தனியார் பங்களிப்புடன் கைத்தறி பட்டு பூங்கா அமைக்கும் பணி கடந்த 2009ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு முதல் துவக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சா் அவா்களின் ஆணைக்கிணங்க, இன்று (11.09.2021)  காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் கீழ்கதிர்பூர் பகுதியில் 75 ஏக்கர் பரப்பளவில் ரூ.102.83 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவினை ஊரக தொழிற்துறை அமைச்சா்  திரு.தா.மோ.அன்பரசன் அவா்கள் மற்றும்  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் திரு.ஆா்.காந்தி அவா்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

இப்பட்டு பூங்காவில் கைத்தறி நெசவு, பட்டு சாயமிடுதல், பருத்தி சாயமிடல், தோய்ச்சல் மற்றும் ஓடல், எம்பிராய்டரி மற்றும் கார்மெண்டிங் ஆகிய இனங்களில் 82 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டு பூங்காவின் மூலம் கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், சாயமிடுபவர்கள் மற்றும் கைத்தறி மதிப்பு இணைப்பில் தொடர்புடைய சுமார் 18 ஆயிரம் நபா்களுக்கு நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவினை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக இன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பட்டுப்பூங்காவில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகள் மற்றும் தொழிற்கூடங்களின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுக்குப் பின்னர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் திரு.ஆா்.காந்தி அவா்கள் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:-

பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா பணியானது கடந்த 10 ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைத்தவுடன் 2 மாத காலத்தில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. 

மேலும், இங்கு நடைபெற்றுவரும் பணிகளை துரிதப்படுத்தி வெகுவிரைவில் பட்டு பூங்கா துவங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் பூங்கா வை துவக்கி வைக்க உள்ளோம் அதற்கான பணிகளை இன்று ஆய்வு செய்துள்ளோம்.

கைத்தறி பட்டு பூங்கா மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 18 ஆயிரம் பேர் பயன்பெற உள்ளதாகவும், இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்படும் பட்டுப் பூங்கா என்ற பெருமையும் பெற உள்ளது என அமைச்சர் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவா்கள் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:-

முன்னால் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் காஞ்சிபுரம் வருகைபுரிந்த போது பட்டு நெசவாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பட்டுப்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். 

அறிவித்த பிறகு அன்றைய கைத்தறி துறையின் மத்திய அமைச்சர் திரு.தயாநிதிமாறன் அவர்களால் மத்திய அரசின் பங்கும், மாநில அரசின் பங்கும் ஒதுக்கப்பட்டது. 

கடந்த 10 ஆண்டுகாலமாக கிடப்பில் இருந்த இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்தி 25 சதவீத பூங்காவின் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 

இப்பூங்கா முழுமையாக செயல்பட்டாற்கு வரும்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டு கைத்தறி நெசவாளர்கள் ஏறத்தாழ  15 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

எந்த ஒரு தொழிற்சாலை மூடப்பட்டாலும் தொழிலாளர்களை திமுக அரசு கைவிடாது என தெரிவித்தார்.

இந்த ஆய்வில், முதன்மைச் செயலாளர்/கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவா் டாக்டர் மா.ஆர்த்தி,  நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஜெகத்ரசட்கன், ஜி.செல்வம் , சட்டமன்ற உறுப்பினா்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன்  மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனா்.

No comments

Thank you for your comments