Breaking News

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு... 2,981 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை:

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்  அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கு 2,981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 23,998 பதவிகளுக்கு மொத்தமாக 79,433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

14,571 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர் என்று மாநில தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

அறிவிப்பு 👉  இறுதி பட்டியல்



No comments

Thank you for your comments