Breaking News

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் அறிவிப்பு

புதுடெல்லி:

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் மொத்தம் 7 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4ம் தேதி நடைபெறும்.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் மொத்தம் 7 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில் 2 இடங்களுக்கும் அக்டோபர் 4ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments