பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வதிட்டபுரம் கிராமத்தில் தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் விழா முன்னிட்டுஏழை விதவை பெண்களுக்கு இலவச சேலை மற்றும் 500 நபர்களுக்கு அன்னதானம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு பேனா வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியினை திட்டக்குடி காவல் ஆய்வாளர் அன்னக்கொடி தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியை சமூக ஆர்வலரும் பத்திரிகையாளருமான வேலு துரைமுருகன் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் பிரகாஷ் கலந்துகொண்டார்
மேலும் திட்டக்குடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் கவுதமன் நகர இணைச் செயலாளர் முருகையன் மாநில தொண்டரணி ராமகிருஷ்ணன்,தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி நிறுவனர் தயா.பேரின்பம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments